Friday, 1 May 2015

முதன் முதலாக .....

அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும் .....

நானும் ரொம்ப நாட்களாக , இல்லை இல்லை ஒரு 6 அல்லது 7 வருடங்களாக பதிவெழுத வேண்டுமென்று யோசித்து கொண்டே இருந்தேன் ...ஆனால் , மற்ற பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து அமைதியாக வாசித்து கொண்டேதான் இருந்தேன். எல்லாரும் எழுதும் நடை,இலாவகம் அப்புறோம் ...மேட்டர் மேட்டர் என்று ஒரு சங்கதி இருக்குமே அது எல்லாம் பாக்கறப்போ ...தம்பி உனக்கு இப்படி ஒரு ஆசை தேவைதானா? தேவை இல்லாம எதுக்கு வம்புல மாட்டிகினுமான்னெல்லாம் யோசிச்சு யோசிச்சு , நாய் சட்டை போட்டுக்க ஆசை பட்ட கதைய போல தள்ளி போட்டுகிட்டே இருந்தேன்...ஆனா பாருங்க நேற்று நான் வசிக்கும் இடத்துக்கு பக்கதுல ஒரு செமினாருக்கு போனேங்க ...அங்கதான் சொன்னங்க ...நீங்க எது செய்யிறதா இருந்தாலும் ...சீக்கிரமா செய்யுங்க ...இல்லனா...நீங்க வாழ்கையில ஒன்னும் செய்ய முடியாதுன்னு ...சரி வேற எது செய்றோமோ இல்லையோ ...ஒரு தமிழ் பதிவை போட்டுதான் பார்ப்போமேன்னு இங்க வந்துட்டேங்க ....முன்னோடிகளான உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் எல்லாருக்கும் உங்கள் ஒரு சலாம் போட்டு ஆரம்பிக்கேறேன் ... ..எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னா  ....மற்ற பதிவுகள் எனக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை அல்லது உணர்வுகளை ஏற்படுத்தியது என்று சொல்லி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கறேன் ....ஆயிரக்கணக்கில் பதிவர்கள் இருப்பதால் எல்லோரையும் பற்றி எழுதுவது என்பது குதிரை கொம்புதான் ...ஆனால் ஒரு சில புகழ் பெற்ற பதிவர்கள் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து தொடங்கலாம் என்பது ஆசை ...தாக்கம் என்பது முற்றிலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றமே தவிர ...மற்றவரை பற்றிய விமரிசனங்கள் அல்ல .....ஆகவே யாரும் இது குறித்து என் மேல் வருத்தபட வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டு கொண்டு .....அடுத்த பதிவில் ....தொடர்ந்து எழுதுவேன் என்று சொல்லி வணக்கம் கூறி விடை பெறுகிறேன் ...சீக்கிரம் ஒரு சோடா கொடுங்கப்பா ...எவ்ளோ நேரம் பேசறது ...சீ..எழுதுவது ....மீண்டும் சந்திக்கலாம்