அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும் .....
நானும் ரொம்ப நாட்களாக , இல்லை இல்லை ஒரு 6 அல்லது 7 வருடங்களாக பதிவெழுத வேண்டுமென்று யோசித்து கொண்டே இருந்தேன் ...ஆனால் , மற்ற பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து அமைதியாக வாசித்து கொண்டேதான் இருந்தேன். எல்லாரும் எழுதும் நடை,இலாவகம் அப்புறோம் ...மேட்டர் மேட்டர் என்று ஒரு சங்கதி இருக்குமே அது எல்லாம் பாக்கறப்போ ...தம்பி உனக்கு இப்படி ஒரு ஆசை தேவைதானா? தேவை இல்லாம எதுக்கு வம்புல மாட்டிகினுமான்னெல்லாம் யோசிச்சு யோசிச்சு , நாய் சட்டை போட்டுக்க ஆசை பட்ட கதைய போல தள்ளி போட்டுகிட்டே இருந்தேன்...ஆனா பாருங்க நேற்று நான் வசிக்கும் இடத்துக்கு பக்கதுல ஒரு செமினாருக்கு போனேங்க ...அங்கதான் சொன்னங்க ...நீங்க எது செய்யிறதா இருந்தாலும் ...சீக்கிரமா செய்யுங்க ...இல்லனா...நீங்க வாழ்கையில ஒன்னும் செய்ய முடியாதுன்னு ...சரி வேற எது செய்றோமோ இல்லையோ ...ஒரு தமிழ் பதிவை போட்டுதான் பார்ப்போமேன்னு இங்க வந்துட்டேங்க ....முன்னோடிகளான உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் எல்லாருக்கும் உங்கள் ஒரு சலாம் போட்டு ஆரம்பிக்கேறேன் ... ..எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னா ....மற்ற பதிவுகள் எனக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை அல்லது உணர்வுகளை ஏற்படுத்தியது என்று சொல்லி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கறேன் ....ஆயிரக்கணக்கில் பதிவர்கள் இருப்பதால் எல்லோரையும் பற்றி எழுதுவது என்பது குதிரை கொம்புதான் ...ஆனால் ஒரு சில புகழ் பெற்ற பதிவர்கள் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து தொடங்கலாம் என்பது ஆசை ...தாக்கம் என்பது முற்றிலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றமே தவிர ...மற்றவரை பற்றிய விமரிசனங்கள் அல்ல .....ஆகவே யாரும் இது குறித்து என் மேல் வருத்தபட வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டு கொண்டு .....அடுத்த பதிவில் ....தொடர்ந்து எழுதுவேன் என்று சொல்லி வணக்கம் கூறி விடை பெறுகிறேன் ...சீக்கிரம் ஒரு சோடா கொடுங்கப்பா ...எவ்ளோ நேரம் பேசறது ...சீ..எழுதுவது ....மீண்டும் சந்திக்கலாம்
எழுதுங்கள் சார், சீக்கிரம் படிக்கவும் ஊக்கம் தரவும் என் போன்றவர்கள் இருக்கிறோம்.
ReplyDeleteநன்றி விமலன் ...உங்களை போன்றவர்கள் உற்சாக படுத்த இருக்கும்போது ....கவலை என்ன ? எழுதுவோம் விரைவில் ..
Deleteநாங்களே எழுதும்போது நீங்க எழுத முடியாதா? உங்களுக்கு நல்ல நடை இருக்கிறது. தொடருங்கள்..
ReplyDeleteநன்றி சுபத்ரா ...உற்சாக படுத்தியமைக்கு ...
Deleteஅவசியம் எழுதுங்கள் தோழர். வட்டிக்கு எதற்கு மீட்டர் குறித்த உங்களது கருத்து என்னை அது குறித்து எழுத வைக்கிறது. எழுதியதும் இணைப்பேன். எனது எண் 9842459759. பேசுங்கள்
ReplyDeleteநன்றி திரு.எட்வின் தோழரே ! தங்கள் ஊரும் திருச்சி என்பது தெரிந்து உவகை கொண்டேன் ...மேலும் நீங்கள், அம்மாச்சி பற்றி எழுதிய பதிவு என் உள்ளதை தொட்டது ..ஏனெனில் , என் அம்மாச்சிக்கும் இது போலவே 92 வயதில் கால் உடைந்து அதன் பின் எழுந்து நடந்து , 99 வது வயதில் மரணமடைந்தார் ....
Deletehttp://www.eraaedwin.com/2011/12/blog-post_29.html
Deleteவலையுலக வருகை சிறக்கட்டும்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றி வலை சித்தர் என்று அழைக்கப்படும் திண்டுக்கல் தனபாலன் .....உங்களை போன்ற மூத்த பதிவர்களின் ஊக்குவிப்பு ..என்னை தொடர்ந்து இந்த எழுதும் பணயில் ஈடுபடுத்தும் என நினைக்கிறேன் ....உதவி தேவைபட்டால் உங்களை தொடர்பு கொள்ளுகிறேன்
Deleteவாருங்கள்..வாருங்கள் சகோ.... நிறைய எழுதுங்கள்
ReplyDeleteதங்களின் எழுத்துக்களைத் தொடர காத்திருக்கிறோம்.....
உற்சாகமான வாழ்த்துக்கள்.....
புதுமையான பெயரைக்கொண்ட தமிழ் மகனே வருக புதுமைப் படைப்புகளை அள்ளித்தருக வாங்க, வாங்க நாங்க இருக்கிறோம் .
ReplyDeleteவாழ்த்துகளுடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
Thank you..Tamil browser is not working and that is why thanks in English.
Deleteஎவ்வளவோ செய்ரோம் இத செய்யமாட்டோமா?
ReplyDeleteவாருங்கள் எனக்கும் தமிழ் எழுத வருமா???
நல்ல பெயர். தருக தங்கள் பதிவுகளைப் படிக்கிறோம் கருத்துக்களைத் தருகிறோம். நன்றி.
நன்றி ...வருகைக்கும் உற்சாக படுத்தியதற்கும் நன்றி
Deleteபாலமகிபக்கங்களில் சில பதிவுகளைக் காண அழைக்கிறேன். வாருங்கள் நன்றி.
ReplyDeleteவலையுலக வருகைக்கு என் வாழ்த்துக்கள். சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
ReplyDeleteவாருங்கள் சகோதரரே. ! அருமையான தொடக்கவுரை நடையுடன், வலையுலகில் ஆர்வத்துடன் வருகை தந்திருக்கிறீர்கள். வலைப்பூவில் நிறைய எழுதி எழுத்துலகில் சாதனை படைக்க இறைவனை மனதாறப் பிரார்த்திக்கிறேன். தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து வருகிறோம்.
என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. இனியும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்..
மிக்க நன்றி ....தங்கள் பதிவு தாக்கம் ஏற்படுத்தியதால் கருத்திட்டேன் ....மீண்டும் உங்கள் பதிவுகளை வாசிக்க காத்திருக்கிறேன்
Deleteஆரம்பமே அசத்தலாக இருக்கிறது பின் என்ன ?இன்னுமா எழுதத் தொடங்கலை ? சீக்கிரம் சீக்கிரம் .......
ReplyDelete